ADDED : மார் 10, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்தில் சுடலை மாடசுவாமி உடனுறை மாரியம்மன் கோயில் மாசிகளரி மகா சிவராத்திரி பாரிவேட்டை விழா முன்னிட்டு விரதம் இருந்து வந்தனர்.
இதனை முன்னிட்டு சுடலை மாடசுவாமி, மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு பால்,தயிர், சந்தனம் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பிறகு 508 விளக்குபூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. சென்னை, திருச்சி,மதுரை உள்ளிட்ட ஊர் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்ரிய நாடார் உறவின் முறையினர் செய்தனர்.