ADDED : மார் 14, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. மகாதேவருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பின் 108 விளக்கு பூஜை நடந்தது.
இதேபோல் முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் பக்தர்கள் குழு சார்பில் 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவரான செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால், திரவியப் பொடி உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் திரிபுரசுந்தரி பத்ரகாளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி சீலைக்காரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
--