/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நில வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும்: தரகர்கள் வலியுறுத்தல்
/
நில வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும்: தரகர்கள் வலியுறுத்தல்
நில வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும்: தரகர்கள் வலியுறுத்தல்
நில வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும்: தரகர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 24, 2024 02:20 AM
திருவாடானை: நிலத்திற்கான அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிலத் தரகர்கள் வலியுறுத்தினர்.
தமிழக அரசு தற்போது நிலத்திற்கான அரசு வழிகாட்டி மதிப்பை 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
மார்க்கெட் விலையில் இருந்து உயர்த்துவதற்கு தற்போது சர்வே எடுக்கும் பணிகளில் திருவாடானை, தொண்டி சார்பதிவாளர் அலுவலக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழிகாட்டி மதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிலத் தரகர்கள் கூறியதாவது:
ஏற்கனவே முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது. 70 சதவீதம் அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வால் நிலங்கள், வீடு விற்பனையும், கட்டுமானமும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கும்.
வழிகாட்டி மதிப்பீடு உயர்வால் வீடு, நிலம் வாங்குவோர், விற்போர், எங்களை போன்ற முகவர்கள், தரகர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் கட்டுமானத் துறை, அதனை சார்ந்த அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பை இழப்பார்கள்.
ஆகவே அரசு கொண்டு வரும் வழிகாட்டி மதிப்பு உயர்வை ஐந்து முதல் பத்து சதவீதம் வரை உயர்த்தி பொதுமக்களையும் அதனை சார்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றனர்.