/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தரிசு நிலங்களை சமன்படுத்தும் லேசர் லெவலிங் கருவி பயன்பாட்டிற்கு வந்தது
/
தரிசு நிலங்களை சமன்படுத்தும் லேசர் லெவலிங் கருவி பயன்பாட்டிற்கு வந்தது
தரிசு நிலங்களை சமன்படுத்தும் லேசர் லெவலிங் கருவி பயன்பாட்டிற்கு வந்தது
தரிசு நிலங்களை சமன்படுத்தும் லேசர் லெவலிங் கருவி பயன்பாட்டிற்கு வந்தது
ADDED : ஜூன் 27, 2024 11:39 PM
திருவாடானை : நிலத்தை சமப்படுத்தும் லேசர் லெவலிங் கருவி பயன்பாட்டிற்கு வந்தது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விவசாயிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்னையாக இருப்பது ஆள் பற்றாக்குறை. கிராமங்களில் வேளாண் பணிகளுக்கு விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.
விவசாயப் பணிகளுக்கு பயன்படும் பெரும்பாலான இயந்திரங்கள் வேளாண் பொறியியல் துறையால் வழங்கப்படுகிறது. நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி, கடப்பாரை, இரும்புசட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர் அரிவாள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
அதே நேரம் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய கருவிகள் இல்லாததால் விவசாயப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறுகையில், நிலத்தை சமன்படுத்துவதற்கான லேசர் லெவலிங் கருவி இல்லை. இக்கருவி மூலம் பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் தரத்தை மேம்படுத்தலாம். நிலத்தில் நீர் சம அளவில் விநியோகம் ஆகும். பயிர்களின் வளர்ச்சி சீராக அமையும்.
வேளாண் பொறியியல் சார்பில் இக்கருவி வழங்காததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஜூன் 20 ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக லேசர் லெவலிங் கருவி நேற்று முன்தினம் வந்தது.
தற்போது திருவாடானை தாலுகாவில் அதனை பயன்படுத்தி உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

