/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் ஓடை வரத்து கால்வாயை மழை காலத்திற்குள் சீரமைக்க கோரிக்கை கடந்த ஆண்டு நிகழ்ந்த பாடம் போதும்

ADDED : செப் 13, 2024 05:08 AM

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி இருவேலி பகுதியில் இருந்து 2 கி.மீ., உள்ள சிற்றோடையின் வரத்து கால்வாயை துார்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 2023 டிச.19 முதல் 22 வரை நான்கு நாட்களுக்கு சாயல்குடி நகர் பகுதிகளில் வெள்ள நீர் அதிகளவு தேங்கியது. எஸ்.எம்.இலந்தைக்குளம், புதுக்குளம் உள்ளிட்ட மூன்று கண்மாய்களில் நிரம்பிய வெள்ள நீர் மறுகால் பாய்ந்து சாயல்குடி இருவழி கண்மாய் மதகு வழியாக சந்தன மர ஓடை எம்.ஜி.ஆர்., ஊரணியை நிறைத்தது. செவல்பட்டி ரோடு மற்றும் இ.சி.ஆர்., பாலத்தின் வழியாக வெள்ள நீர் தேங்கியது.
எனவே முறையாக பராமரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடலாடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வீ.மூக்கையா கூறியதாவது:
இருவேலியில் இருந்து சாயல்குடி புறநகர் பகுதி வழியாக வெள்ள நீர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள குறுகிய பாலம் வழியாக முறையாக செல்ல வழியின்றி தண்ணீர் தேங்குகிறது. பின்னர் அதை கடந்து கிழக்கு கடற்கரை சாலை பாலத்தின் துவாரம் சிறிதாக இருப்பதால் நீரை கடத்த வழியின்றி உள்ளது.
இதனால் குலையிருப்பு கண்மாய் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் நேரடியாக செல்கிறது. எனவே ஹவுசிங் போர்டு மற்றும் இ.சி.ஆர்., பாலம் பகுதியில் புதியதாக அகலப்படுத்தப்பட்ட பாலம் வேண்டும்.
பருவமழை துவங்குவதற்கு முன் இதற்கான பூர்வாங்க பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கடந்த ஆண்டில் கற்றுத்தந்த பாடத்தால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். எனவே ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை மற்றும் பாசன கண்மாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.