/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வழக்கறிஞர்கள் ஜூலை 30 வரை நீதிமன்றம் புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் ஜூலை 30 வரை நீதிமன்றம் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 16, 2024 05:48 AM
ராமநாதபுரம் : -மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நடத்தி வரும் நீதிமன்ற புறக்கணிப்பு ஜூலை 30 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்துவழங்கறிஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு நடப்பதால் நீதிமன்ற பணிகள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனர்.
அனைத்து வழக்குகளும் வேறு தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.