/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புபோராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் * ஆக., 28 ல் மனித சங்கிலி போராட்டம்

ADDED : ஆக 04, 2024 10:50 PM
ராமநாதபுரம்:நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக செப்., 28 வரை நிறுத்தி வைக்கவும், ஆக., 28ல் நீதிமன்றங்களை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடவும் தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுளள புதிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடக்கிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு கூட்டம் சமீபத்தில் தலைவர் நந்தகுமார், செயலாளர் பன்னீர்செல்வன், பொருளாளர் ரவி தலைமையில் திருவண்ணாமலையில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகள் குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது: ஜூலை 29ல் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அகில இந்திய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி எம்.பி., க்கள் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கைகளை தெரியப்படுத்தினர். இதில் பங்கேற்ற எம்.பி.,க்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த போராட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.
வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகி கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இந்த புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக செப்., 29 வரை நிறுத்தி வைப்பது என்றும், இன்று (ஆக., 5) முதல் நீதிமன்ற பணிகளுக்கு செல்வது என்றும், தமிழகத்தில் ஆக., 28ல் நீதிமன்ற பணியை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்றும் முடிவானது என்றனர்.