/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீதிமன்றம் பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள்
/
நீதிமன்றம் பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள்
ADDED : ஆக 24, 2024 03:36 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், திருநெல்வேலியில் வழக்கறிஞர் சரவணன்ராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
திருநெல்வேலியில் வழக்கறிஞர் சரவணன்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கறிஞர் சரவணன்ராஜ் கொலையை கண்டித்தும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர். இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.

