/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
15வது நிதிகுழுவில் கிராமச்சாலை அமைக்க தடை ஆணையை ரத்துசெய்ய தலைவர்கள் கோரிக்கை

ADDED : மே 30, 2024 10:19 PM

உச்சிபுளி, - மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 15வது நிதிக்குழுவில் ரோடு அமைக்ககூடாது என்ற ஆணையை ரத்து செய்யவேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சிகளில்மத்திய அரசின் 15 வது நிதிக் குழு சார்பில் சாலைகள்,கட்டடங்கள் தண்ணீர் குழாய்கள் மற்றும் அடிப்படைவசதிகளுக்கான பணி நடக்கிறது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 15வது நிதிக் குழுவில் ஊராட்சிகளில் சாலை அமைக்கக்கூடாது எனஆணை வந்துள்ளது. இதை ரத்து செய்து எங்களுக்குசாலை அமைக்க ஆணை வழங்க வேண்டும் என மண்டபம்ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் கார்மேகம் (என் மனம் கொண்டான்), செயலாளர் காமில் உசேன் (புதுமடம்) தலைமையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பி.டி.ஓ., சங்கர பாண்டியன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊராட்சி தலைவர்கள் கீழநாகாச்சி கணேசன், இருமேனி சிவக்குமார், வெள்ளரி ஓடை சந்திரசேகர், பிரப்பன்வலசைகலா, மானாங்குடி பரமேஸ்வரி, ஆற்றங்கரை முகமது அலி ஜின்னா, தாமரைக் குளம் களஞ்சிய லட்சுமி, காரான்சக்திவேல், வாலாந்தரவை முத்தமிழ் செல்வி, தங்கச்சிமடம் குயின்மேரி பங்கேற்றனர்.