/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுபானக் கூடங்களில் தவறு நடந்தால் உரிமம் ரத்து; கலெக்டர் எச்சரிக்கை

ADDED : ஜூன் 24, 2024 11:54 PM

ராமநாதபுரம்: மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் செயல்படும் மதுபான கூடங்களில் தவறு நடப்பது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். கலெக்டர் கூறியதாவது:
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, கலால் துறை மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து குழு அமைத்து செயல்பட வேண்டும்.
வியாபார நோக்குடன் மது பாட்டில்கள் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபான கூடங்களில் ஆய்வு செய்து தவறுகள் நடந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
கல்வித்துறை, பொதுசுகாதாரத்துறை ஒருங்கிணைந்து குழு அமைத்து பள்ளிகளின் அருகே வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து போதை பொருட்கள் விற்பது தெரிய வந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஐயப்பன், மதுவிலக்கு டி.எஸ்.பி., ரமேஷ், கலால்துறை உதவி இயக்குநர் சாந்தி பங்கேற்றனர்.