/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உயிருக்கு ஆபத்துங்க: பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்: பலிக்கு முன் போலீசார் நடவடிக்கை தேவை

ADDED : ஜூலை 25, 2024 04:18 AM

ராமநாதபுரம், ஜூலை 25- ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லுாரி முடியும் நேரத்தில் போதிய பஸ் வசதி  இல்லாத நிலையில் கண்டக்டர், டிரைவர் கண்டித்தாலும்  உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தேவைக்கு ஏற்றவாறு  காலை, மாலை நேரத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படுவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக  மாலை நேரங்களில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது. இவர்களை டிரைவர், கண்டக்டர்கள் கண்டித்தாலும் அடங்க மறுத்து அவர்களுடன் மாணவர்கள் வாக்குவாத்தில் ஈடுபடுகின்றனர்.
படிகட்டு பயணத்தால் ஏற்கனவே பல விபத்துக்கள் நடந்துள்ளன. எனவே இவ்விஷயத்தில்  அலட்சியம் காட்டாமல்  விபத்தை தடுக்க    பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செயல்படும், முடிவடையும் நேரங்களில்  கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆபத்தை உணராமல் அத்துமீறி பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க  வேண்டும். அதற்கு புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.