
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவிலில் பாரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி பகுதியில் டாஸ்மாக் பார் செயல்படுகிறது. இங்கு டாஸ்மாக் திறப்பதற்கு முன் நேற்று முன்தினம் காலை மது விற்பதாக தகவல் வந்தது. நயினார்கோவில் போலீஸ் எஸ்.ஐ., முருகானந்தம் மது பாட்டில்கள் விற்ற அக்கிரமேசி கோபால் 36, என்பவரை கைது செய்தார்.
தற்போதைய புதிய மதுவிலக்கு திருத்த சட்டத்தின் படி கோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 10 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.