/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பர்வதம் எழுந்தருளிய சுவாமி, அம்மன்
/
ராமேஸ்வரத்தில் பர்வதம் எழுந்தருளிய சுவாமி, அம்மன்
ADDED : ஆக 15, 2024 01:40 AM

ராமேஸ்வரம்,:-ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். இதனால் கோயில் நடை அடைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 17ம் நாள் திருவிழாவான நேற்று கோயிலில் இருந்து காலை 7:00 மணிக்கு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
அங்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. பின் அங்கிருந்து புறப்பாடாகி திருக்கோயிலுக்கு திரும்பினர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டது.