/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதுக்குடி-ஊரக்குடி செல்லும் ரோட்டில் பூத்துள்ள தாமரை
/
புதுக்குடி-ஊரக்குடி செல்லும் ரோட்டில் பூத்துள்ள தாமரை
புதுக்குடி-ஊரக்குடி செல்லும் ரோட்டில் பூத்துள்ள தாமரை
புதுக்குடி-ஊரக்குடி செல்லும் ரோட்டில் பூத்துள்ள தாமரை
ADDED : ஏப் 18, 2024 05:18 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே புதுக்குடியில் இருந்து ஊரக்குடி செல்லும் ரோட்டோர குளத்தில் ஏராளமான தாமரை மலர்கள் பூத்துள்ளன.
பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் ஆங்காங்கே சில நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனையடுத்து கடந்த மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் இருந்து வந்த தண்ணீரை கண்மாய்களில் சேமித்தால் விவசாயமும் நடக்கிறது.
குறிப்பாக ஊரக்குடி செல்லும் கிராம ரோட்டோரம் உள்ள குளத்தில் ஏராளமான தாமரை மலர்கள் பூத்துள்ளன.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் கிராம மக்கள் வெயிலுக்கு மத்தியில் தாமரை மலர்களை பார்த்து அலைபேசியில் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.