/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாகனத்தில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரன்கள்: மக்கள் பாதிப்பு
/
வாகனத்தில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரன்கள்: மக்கள் பாதிப்பு
வாகனத்தில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரன்கள்: மக்கள் பாதிப்பு
வாகனத்தில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரன்கள்: மக்கள் பாதிப்பு
ADDED : மார் 10, 2025 04:43 AM
திருவாடானை,: திருவாடானை, தொண்டி ஆகிய இடங்களில் வாகனங்களில் ஏர்ஹாரன்களால் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.
வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பம் ஏர்ஹாரன்களை பயன்படுத்த தடையுள்ளது. போலீசாரின் பெயரளவு நடவடிக்கை காரணமாக திருவாடானை, தொண்டியில் வாகனங்களில் ஏர்ஹாரன்களை பொருத்தி அதிக ஒலி எழுப்பி செல்கின்றனர்.
போக்குவரத்தில் பதட்டம் ஏற்படுவதால் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். நெரிசல் மிகுந்த ரோடுகளில் சில வாகன ஓட்டுநர்களின் செயல் பதட்டத்தையும் விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இளைஞர்கள் டூவீலர்களில் செல்லும் போது லைசலன்சர்களை மாட்டி அனைத்து இடங்களிலும் தொடர்ந்து ஒலிக்கச்செய்கின்றனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள் அமைந்துள்ள பகுதியிலும் இந்த விதிமீறல் உள்ளது. சில தனியார் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்களிலும் இத்தகைய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.