/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் மல்லிகை பிச்சிப்பூ விலை குறைவு சீசனில் வரத்து அதிகரிப்பு

ADDED : மே 04, 2024 04:56 AM

கீழக்கரை: கீழக்கரை நகர் பகுதிகளில் நேற்று மல்லிகை, பிச்சிப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. பூ வியாபாரி வேல்முருகன் கூறியதாவது:
தற்போது மண்டபம், அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பூக்களின் வரத்து சீசனை முன்னிட்டு அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் கிலோவிற்கு ரூ.200 வீதம் அதிகரித்து இருந்த மல்லிகை பூ தற்போது கிலோ ரூ.400க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பூக்கள் விலை குறைந்ததால் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் உதிரிப் பூக்களை வாங்கி செல்கின்றனர் என்றார்.