/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துபாயில் வெள்ள சேதத்தால் பாதித்தோருக்கு நிவாரணப் பணியில் கீழக்கரை இளைஞர்கள் இ மான் கலாசார மையத்தின் மூலம் உதவி

ADDED : மே 08, 2024 06:09 AM

கீழக்கரை, : கடந்த வாரம் துபாயில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் விமானப் பயணிகளுக்கு கீழக்கரை இளைஞர்கள் அமைப்பினர் உதவினர்.
துபாயில் கடந்த வாரம் அதிகளவு மழை பொழிவு ஏற்பட்டதால் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக முழுவதும் மாறியது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அங்குள்ள மக்கள் பெரும் அவதிப்பட்டனர். அமீரக அரசின் துரித நடவடிக்கையால் சில தினங்களில் நிலைமை சீராக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பியது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பல்வேறு இந்திய சமூக நல அமைப்புகள் உதவும் பணியில் ஈடுபட்டனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ஆயிரம் பயணிகள் மூன்று நாட்கள் விமான நிலையத்தில் தங்கும் சூழல் ஏற்பட்டது.
ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஊர் திரும்புவதற்காக காத்திருந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்திய துணை துாதரகம் முன் வந்தது. இந்திய துணை துாதரகத்துடன் இணைந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இளைஞர்கள் விமான நிலையத்தில் காத்திருந்து இந்திய பயணிகளுக்கு மூன்று நாட்களுக்கும் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
கீழக்கரை துபாய் இமான் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் 48, கூறியதாவது: தொடர் மழையால் பல்வேறு பணிகளும் தடைபட்டது. குறிப்பாக விமானங்கள் ரத்தாகி சொந்த ஊருக்கு செல்ல இயலாத நிலையில் சிரமமான சூழ்நிலை காணப்பட்டது. அச்சமயத்தில் இந்திய துணை துாதர் சார்பில் இமான் அமைப்பிற்கு தகவல் தரப்பட்டது. அதன் பேரில் மூன்று தினங்களாக 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. எங்களது சேவையை துபாய் அமீரக அரசு பாராட்டியது. சில தினங்களில் நிலைமை சீரானவுடன் அனைத்து பயணிகளும் சொந்த ஊர் திரும்பினர் என்றார்.