தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 11 மாடுகளை திருடியவர் கைது

11 மாடுகளை திருடியவர் கைது

11 மாடுகளை திருடியவர் கைது


ADDED : ஜூலை 14, 2026 06:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே 11 மாடுகளை திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தொண்டி அருகே சின்னத்தொண்டியை சேர்ந்தவர் கார்த்திக் 27. இவரும் 17 வயது சிறுவனும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக கிராமங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகளை திருடி மற்ற ஊர்களில் கொண்டு போய் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். கடந்த மாதம் கட்டிவயல் கிராமத்தை சேர்ந்த தினகரனுக்கு சொந்தமான பசுமாட்டை திருடியுள்ளனர்.

அந்த மாட்டை விற்பனை செய்வதற்காக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாட்டுச்சந்தைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாட்டை விற்க முயன்ற போது அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த மக்கள் பிடித்து வைத்தனர். எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் சென்று சிறுவனை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த கார்த்திக்கை நேற்று கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், மாடுகளை விற்பனை செய்த பணம் ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பல்வேறு கிராமங்களில் 11 மாடுகளை திருடியது தெரிய வந்தது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us