/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிரட்டி நகையை பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
/
மிரட்டி நகையை பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மார் 02, 2025 05:45 AM

ராமநாதபுரம்: -பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்தவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி மகாலட்சுமி 42. இவர் முதுகுளத்துாரில் அ.தி.மு.க., எம்.பி., தர்மர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். பிப்.,9ல் தர்மர் எம்.பி., வீட்டில் மகாலட்சுமி தனது மகள் இந்து பிரியாவுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது டூவீலரில் வந்த முதுகுளத்துார் மேலகன்னிசேரியை சேர்ந்த வையாபுரி மகன் அருண்குமார் 25, செலவுக்கு மகாலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஒன்றே கால் பவுன் செயினை பறித்துச் சென்றார்.
மகாலட்சுமி புகாரில் முதுகுளத்துார் போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.
இவர் மீது முதுகுளத்துார், பேரையூர், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், அவனியாபுரம், கரிமேடு, கீரைத்துறை, தெப்பக்குளம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.
ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்துள்ளார். இவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சந்தீஷ் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோனுக்கு பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் அருண்குமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.