ADDED : ஜூன் 05, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே ஆய்ங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் 28.
திருமணம் ஆகவில்லை. வீட்டிற்கு எதிரில் உள்ள சமுதாய கூட கட்டடம் வளாகத்தில் துாங்குவது வழக்கம். மே 28 ல் நள்ளிரவில் துாக்கத்திலிருந்து எழுந்த போது தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அருண்குமார் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலையில் இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
