/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மொபைல் பேட்டரி வெடித்து பைக்கில் விழுந்தவர் மரணம்
/
மொபைல் பேட்டரி வெடித்து பைக்கில் விழுந்தவர் மரணம்
ADDED : ஜூலை 22, 2024 12:59 AM
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, எம்.எஸ்.அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ரஜினி, 36; தனியார் வங்கி செக்யூரிட்டி. நேற்று ரஜினியும், நண்பர் ஆற்றுப்பாலம் பாண்டி, 31, என்பவரும் துணி எடுக்க டூ - வீலரில் மதுரை சென்றனர்.
அங்கிருந்து பரமக்குடிக்கு புறப்பட்டனர். கமுதக்குடி அருகே மாலை, 5:00 மணிக்கு வந்த போது ரஜினியின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் பேட்டரி வெடித்தது. அவர் தொடையில் ரத்தக்காயம் ஏற்பட்டு, நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னால் அமர்ந்திருந்த பாண்டி காயத்துடன் ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.