/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிய வருக்கு 7 ஆண்டு ஜெயில்
/
மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிய வருக்கு 7 ஆண்டு ஜெயில்
மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிய வருக்கு 7 ஆண்டு ஜெயில்
மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிய வருக்கு 7 ஆண்டு ஜெயில்
ADDED : பிப் 22, 2025 06:43 AM

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் சிவகாமி நகரை சேர்ந்த பட்டாணிமகன் ஜனசேகரன் 44. இவரது மனைவி பிரியா 35, கணவன் மனைவியிடையே 2017 டிச.,6 ல் தகராறு ஏற்பட்டது. இதில் பிரியாவை அரிவாளால் வெட்டியதில் காயமடைந்தார். தடுக்கவந்த மாமியார்செல்விக்கு 55, ஜனசேகரன் கொலை மிரட்டல் விடுத்தார்.
செல்வி புகாரில் ராமேஸ்வரம் போலீசார் வழக்குபதிந்து ஜனசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமை நீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மோகன்ராம் மனைவி, மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஜனசேகரனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜவஹர் ஆஜரானார்.