/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதியில் ரூ.45 லட்சம் நகைகள் மோசடி தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
/
கமுதியில் ரூ.45 லட்சம் நகைகள் மோசடி தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
கமுதியில் ரூ.45 லட்சம் நகைகள் மோசடி தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
கமுதியில் ரூ.45 லட்சம் நகைகள் மோசடி தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
ADDED : ஆக 25, 2024 02:33 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரூ.45 லட்சம் நகைகளை மோசடி செய்த நிதி நிறுவன கிளை மேலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர். பெண் பொறுப்பாளர் உட்பட 3 பேரை போலீசார் தேடுகின்றனர்.
கமுதியில் முத்துாட் மினி பைனான்ஸ் லிட்., நிதி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் கமுதி மேளக்காரத்தெருவை சேர்ந்த செந்துாரான் மகன் சரவணன் 34, கிளை மேலாளராகவும், நிறுவன கூட்டு பொறுப்பாளராக கோவிலாங்குளம் வில்லனேந்தல் ராமசாமி மகள் முத்துபிரியா, நிதி நிறுவன பணியாளர்களாக கமுதி கண்ணார்பட்டி நடுத்தெரு வழிவிட்டான் மகன் முத்து, பேரையூர் நாடார் தெரு ஜெயச்சந்திரன் மகன் மோகன் கார்த்திகேயன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகளை பணத்தை திருப்பி செலுத்தி மீட்டுக்கொண்டதாக கம்ப்யூட்டரில் பதிவு செய்து நகைகளை திருடியுள்ளனர்.
இந்நிறுவனத்தில் 2024 மே 21 ல் தணிக்கை நடந்தது. இதில் 4 பேரும் சேர்ந்து ரூ.44 லட்சத்து 31 ஆயிரத்து 435 மதிப்புள்ள நகைகளை திருடி விற்று பங்கு போட்டதும் தெரிய வந்தது.
நிதி நிறுவன பிராந்திய மேலாளர் பரமக்குடி சத்தியமூர்த்தி மகன் தனஞ்செயன் 45, மாவட்ட எஸ்.பி., சந்தீஷிடம் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். கூட்டு பொறுப்பாளர் முத்துப்பிரியா, மோகன் கார்த்திகேயன், முத்து ஆகியோரை தேடி வருகின்றனர்.-------

