/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி கருப்பணசாமி கோயிலில் மண்டல பூஜை
/
பரமக்குடி கருப்பணசாமி கோயிலில் மண்டல பூஜை
ADDED : ஜூன் 21, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி பெரிய கடை வீதியில் உள்ள குருநாத சுவாமி, வேலங்குடி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி மண்டல பூஜை நடக்கிறது.
இக்கோயிலில் கும்பாபிஷேக விழா ஜூன் 17ல் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜையில் குருநாத சுவாமி, வேலங்குடி கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
தினமும் சுவாமிக்கு தங்கம், வெள்ளி மற்றும் முத்தங்கி கவசங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.