நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கீழக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோயில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
முன்னதாக விநாயகர் வழிபாடு மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவர் அம்மனுக்கு ஊற்றப்பட்டு மண்டலாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.