/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருமணமான 17 வயது சிறுமி கர்ப்பம் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
/
திருமணமான 17 வயது சிறுமி கர்ப்பம் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
திருமணமான 17 வயது சிறுமி கர்ப்பம் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
திருமணமான 17 வயது சிறுமி கர்ப்பம் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
ADDED : மே 28, 2024 10:02 PM
திருவாடானை:புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தொண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பாட்டி வீட்டிற்கு செல்வார். அங்கு அவருடைய உறவினரான மணியுடன் காதல் ஏற்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் அக்கிராமத்தில் உள்ள கோயிலில் இருவருக்கும் கடந்த மார்ச்சில் திருமணம் நடந்தது.
இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். தொண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமி தடுப்பூசி போட சென்ற போது அவரின் வயதுகுறித்து தெரிந்ததால் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் கூறினர்.
இதையடுத்து சிறுமியின் கணவர் மணி, மாமனார் பன்னீர் 45, மாமியார் செல்வி 40, உறவினர்கள் கனகசுந்தரம் 46, செல்வலட்சுமி 36 ஆகிய 5 பேர் மீது திருவாடானை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.