ADDED : மே 11, 2024 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி:-ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் நாகூர்கனி 99. முன்னாள் இந்திய தேசிய ராணுவ (ஐ.என்.ஏ.,) வீரரான இவர் காலமானார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தில் நாகூர் கனி சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்தியா விடுதலைக்காக போராடினார். இந்திய சுதந்திரத்திற்கு பின் பெருநாழியில் குடியேறினார்.
இவருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் அளித்து வந்தது. வயது முதிர்வால் நேற்று முன்தினம் இரவு காலமானார். கமுதி தாசில்தார் சேதுராமன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஸ்வரன், வருவாய்த்துறையினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நாகூர் கனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை பெருநாழி முஸ்லிம் மையவாடியில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.