/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருதவனம் மாகாளியம்மன் வண்டி மாகாளி பால்குட விழா நயினார்கோவிலில் கோலாகலம்

ADDED : மே 10, 2024 04:42 AM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் மருதவனம் மாகாளி அம்மன் கோயிலில் வண்டி மாகாளி உற்ஸவம் கோலாகலமாக நடந்தது.
நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள மருதவனம் மாகாளியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக நடக்கிறது.
ஏப்.29ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு காலை, மாலை வீதிவலம் வந்தார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மாகாளி வேடமணிந்தவர்கள் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் ஏறி அமர்ந்தனர். மேலும் மாட்டு வண்டியில் பெண் வேடமிட்ட ஆண்கள் ஆடி வந்தனர்.
சிவன் மற்றும் புலி வேடமிட்டு பக்தர்கள் சென்றனர். விழாவில் சுற்றுவட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மே 7ல் பொங்கல் விழா நடந்த நிலையில் நேற்று காலை பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகை அபிஷேக ஆராதனைகள்நடந்தன. ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.