/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் மாசி மக திருமஞ்சனம்
/
உத்தரகோசமங்கையில் மாசி மக திருமஞ்சனம்
ADDED : மார் 14, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவாலயமாக திகழ்கிறது. மாசி மகத்தை முன்னிட்டு மரகத நடராஜர் சன்னதி முன்பாக அபிஷேக பீடம் அமைக்கப்பட்டது.
அவற்றில் உற்ஸவ மூர்த்திகளான நடராஜப் பெருமான் சமேத சிவகாமி அம்மனுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. திருமஞ்சன விழா மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை தொடர்ந்து பூஜைகள் நடந்தது.
தேவாரம், திருவாசகம், சிவபுராணம் உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன. கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டு மூன்றாம் பிரகாரத்தில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.