/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் தயாரிக்கப்படும் மாசில்லா விநாயகர் சிலைகள்; ஹிந்து முன்னணி ஏற்பாடு
/
ரெகுநாதபுரத்தில் தயாரிக்கப்படும் மாசில்லா விநாயகர் சிலைகள்; ஹிந்து முன்னணி ஏற்பாடு
ரெகுநாதபுரத்தில் தயாரிக்கப்படும் மாசில்லா விநாயகர் சிலைகள்; ஹிந்து முன்னணி ஏற்பாடு
ரெகுநாதபுரத்தில் தயாரிக்கப்படும் மாசில்லா விநாயகர் சிலைகள்; ஹிந்து முன்னணி ஏற்பாடு
ADDED : ஆக 01, 2024 11:11 PM

ரெகுநாதபுரம் : ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்.7ல் கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 240க்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கான முயற்சியில் ஹிந்து முன்னணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத இயற்கையான முறையில் ரசாயன கலப்பில்லாத காகித அட்டைக்கூழ் அச்சாக வார்க்கப்படுகிறது. அவற்றின் மீது கிழங்கு மாவு, அரிசி மாவு உள்ளிட்ட கலவைகள் பூசப்பட்டு விநாயகர் வடிவம் கொண்டு வரப்படுகிறது.
பல கலைநய வண்ணமிகு விநாயகர் சிலைகளை விழுப்புரம் பகுதியில் இருந்து தொழிலாளர்கள் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.
3 அடி முதல் 9 அடி வரை விநாயகர் சிலையில் வாகனங்களாக சிம்மம், அனுமன், அன்னப்பறவை, காளை, குதிரை பூட்டிய தேர் அலங்காரம், தாமரை, ராஜ அலங்காரம், சிவன் முருகன் இணைந்த அலங்காரம் உள்ளிட்டவைகளுடன் தயாராகி வருகிறது.
தற்போது விநாயகர் சிலைக்கு வண்ணமேற்றும் பணிகள் நடந்து வருகிறது.
ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் கூறியதாவது:
அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி சிலைகள் 200க்கும் அதிகமாக செய்யப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரெகுநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைத்து விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விழுப்புரம் பகுதி தொழிலாளால் சிலை வடிக்கப்படுகிறது. வரும் விநாயகர் சதுர்த்திக்கு முன் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விடும் என்றார்.