ADDED : பிப் 27, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் மாசித் தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் சிவராத்திரி விழா பிப்.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாள் விழாவான நேற்று சிவராத்திரியையொட்டி காலை 9:00 மணிக்கு மேல் கோயில் கிழக்கு ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட மாசி தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியா விடை அம்மன் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர்.
ஏராளமான பக்தர்கள், கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, கோயில் ஊழியர்கள் தரிசனம் செய்தனர். பின் தேரின் வடத்தை பக்தர்கள் இழுத்து கோயில் நான்கு ரத வீதியில் வலம் வந்தனர்.