ADDED : ஆக 08, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கும்பகோணம் தவயோகி மவுனகுரு சுவாமிகள் கோயிலில் 116ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
கோயிலில் காலையில் கொடியேற்றம் நடந்தது. கணபதி ேஹாமத்துடன் துவங்கி விஜய் குருக்கள்தலைமையில் யாக பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் மவுன குருசுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, சென்னை ஆகிய வெளியூர், உள்ளூர் பக்தர்கள் பங்கேற்றனர்.