ADDED : ஆக 15, 2024 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ம.தி.மு.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில சட்டப்பிரிவு செயலாளர் அரசு அமல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் பிரகாசம், மாவட்ட செயலாளர் சுரேஷ், பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர் செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ராமநாதபுரம் அவைத்தலைவர் அபுபக்கர் நன்றி கூறினார்.