ADDED : ஆக 08, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: திருப்பூரில் நடந்த 3வது தமிழ்நாடு தடகள போட்டிகளில் பரமக்குடி வீரர்கள் மூவர் பதக்கம் வென்றனர்.
தேசிய ஈட்டி எறிதல் தினத்தையொட்டி தமிழ்நாடு தடகள கழகம் சார்பில்3வது சாம்பியன்ஷிப் போட்டிகள் திருப்பூரில்நடந்தது. இதில் பரமக்குடி அசுரன் விளையாட்டு பயிற்சி மையம் சார்பில் வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் 18 வயது பெண்கள் பிரிவு குண்டு எறிதலில் மதுமிதா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் வட்டு எறிதலில் 2ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம்வென்றார்.
16 வயது ஆண்கள்குண்டு எறிதலில் அபினவ் தங்க பதக்கம், 16 வயது பெண்கள் பிரிவு குண்டு எறிதலில் சாருமதி வெள்ளி பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இவர்களை பயிற்சியாளர் அருண் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட சக வீரர்கள் பாராட்டினர்.