/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி-டி--பிளாக் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
மருத்துவக்கல்லுாரி-டி--பிளாக் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
மருத்துவக்கல்லுாரி-டி--பிளாக் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
மருத்துவக்கல்லுாரி-டி--பிளாக் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : மே 30, 2024 10:27 PM

ராமநாதபுரம், - ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் இருந்து டி-பிளாக், கேணிக்கரை செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
பட்டணம்காத்தான் ஊராட்சி கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி அமைந்துள்ளது. இங்கிருந்து கேணிக்கரை, ஓம்சக்தி நகர், டி-பிளாக்கிற்கு செல்லும் ரோடு பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது.
இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து சிறிய அளவில் விபத்துக்கள் நடக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மழை பெய்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே மருத்துவக்கல்லுாரி அருகே சேதமடைந்துள்ள ரோட்டை விரைவில் சீரமைக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.