/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கையுறை, மாஸ்க் தட்டுப்பாட்டால் அவதி
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கையுறை, மாஸ்க் தட்டுப்பாட்டால் அவதி
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கையுறை, மாஸ்க் தட்டுப்பாட்டால் அவதி
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கையுறை, மாஸ்க் தட்டுப்பாட்டால் அவதி
ADDED : மார் 14, 2025 07:03 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கையுறை, மாஸ்க் தட்டுப்பாட்டால் பணியாளர்கள் தவிக்கின்றனர்.
மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகச்சைக்கு வருகின்றனர். மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இருதய, தலைக்காய சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, தீக்காய சிகிச்சை பிரிவு, மன நலப்பிரிவு, கண், பல் மருத்துவப்பிரிவு என பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள், டாக்டர்கள், புண்ணுக்கு மருத்து கட்டுபவர்கள், தீக்காய சிகிச்சை பிரிவில் கண்டிப்பாக கையுறைகள் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது. அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் கையுறைகள், மாஸ்க் தட்டுப்பாடு காரணமாக வழங்குவதில்லை.
இது போன்ற செயல்களால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் பால சிவஜோதி 37, நோய் தொற்று காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்ட பிறகும் கூட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க் வாங்கித் தராமல் இருப்பதால் பணியாளர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் இனியாவது நடவடிக்கை எடுக்குமா. ------------