/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மெகா கிளீனிங் கேம்ப் * அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்.. *டெங்கு கொசுப்புழு ஒழிப்பதற்கான நடவடிக்கை

ADDED : மே 24, 2024 02:14 AM
ராமநாதபுரம்: -தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்கங்களில் ஒரே நேரத்தில் நேற்று துாய்மைப்பணி செய்யப்பட்டது. டெங்கு கொசு ஒழிப்பு பணியாக மாடிகள், சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் இருக்கும் நிலையில் கிராமப்புற ஆரம்ப சுகாதாரநிலைய கட்டடங்களில் கொசு, கொசு புழுக்கள் உருவாகாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாடியில் உள்ள இலை, தழைகள் அகற்றி தண்ணீர் தேங்காமல் இருக்கவும், சுகாதார நிலையத்தில் சுற்றுப்புறங்கள் துாய்மை பணிகள் செய்து ஒரே நாளில் மெகா கிளீனிங் கேம்ப் நடத்தப்பட்டது.
இதில் நுாறு நாள் வேலை திட்டப்பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் மஸ்துார்கள், தன்னார்வலர்கள், துப்புரவு பணியாளர்களை கொண்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுத்தம் செய்வதற்கு முன்பு புகைப்படம் எடுத்தும், சுத்தம் செய்த பின் புகைப்படம் எடுத்தும் பொது சுகாதாரத்துறையினருக்கு அனுப்பி வைக்க கேட்டுள்ளனர். இதன் படி நேற்று முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் துாய்மை பணிகள் நடந்தது.
ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன்குமார் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் உள்ள 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 59 ஆரம்ப சுகாதார நிலையங்களில் துாய்மை செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கையாக கொசு மற்றும், கொசு புழுக்கள் உருவாகாமல் இருக்க இந்த மெகா கிளீனிங் முகாம் நடத்தப்பட்டுள்ளது என்றார். --------