ADDED : செப் 07, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை,: - உத்தரகோசமங்கை சமுதாய கூடத்தில் அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் சாமிநாதன் முன்னிலை வைத்தார். திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை வரவேற்றார்.
மாவட்ட பொருளாளர் குமாரவேல், அமைப்புசாரா ஓட்டுநர் மாவட்ட செயலாளர் பழனி முருகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராமு, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சேது, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் மலர்க்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.