/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்; ஆம்புலன்சுக்கு வழி விடாததால் தவிப்பு
/
நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்; ஆம்புலன்சுக்கு வழி விடாததால் தவிப்பு
நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்; ஆம்புலன்சுக்கு வழி விடாததால் தவிப்பு
நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்; ஆம்புலன்சுக்கு வழி விடாததால் தவிப்பு
ADDED : ஏப் 02, 2024 06:52 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிரசாரத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாததால் நோயாளியின் குடும்பத்தினர் தவித்தனர்.
நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர் ராஜகண்ணப்பன், காதர்பாட்ஷா எம்.எல்.ஏ., ஆகியோர் ராமநாதபுரம் -நயினார்கோவில் நெடுஞ்சாலையில் சூரன்கோட்டை காலனியில் பிரசாரம் செய்தனர். இதில் வேட்பாளர்களுடன் வந்த கார்களால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது ஆம்புலன்ஸ் ஒன்றில் நோயாளியை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அவசரமாக வந்தனர். அப்போது கட்சியினரின் கார்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ்க்கு வழி விடாததால் நோயாளியின் குடும்பத்தினர் தவித்தனர்.
இதையடுத்து 15 நிமிடங்களுக்குப் பிறகு காதர்பாட்ஷா எம்.எல்.ஏ., கட்சிக்காரர்களிடம் மைக்கில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுமாறு கூறியதன் பேரில் வழி விடப்பட்டது.
ஓட்டு கேட்டு பிரசாரம் செய்யும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி விட வேண்டும்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இனியாவது உணர வேண்டும்.-----------

