ADDED : மே 27, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: பரமக்குடி வாகைகுளம் அருகே சரக்கு வாகனத்தில் பயணித்தவர்கள் மே 18 ல் விபத்தில் சிக்கியதில் 18 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் இது வரை ஆறு பேர் பலியாகி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், இந்த விபத்து குறித்தும், இதில் இறந்தவர்கள் குறித்தும் முதல்வருக்கு கடிதம் எழுதி முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதி வழங்க பரிந்துரை செய்துள்ளார்.
