/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில்வே கிராசிங்குகளில் சீரமைக்கப்படாத ரோடு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
ரயில்வே கிராசிங்குகளில் சீரமைக்கப்படாத ரோடு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ரயில்வே கிராசிங்குகளில் சீரமைக்கப்படாத ரோடு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ரயில்வே கிராசிங்குகளில் சீரமைக்கப்படாத ரோடு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : செப் 12, 2024 04:36 AM

பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்குகளில் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
மதுரை-ராமேஸ்வரம் வழித்தடம் அகல ரயில் பாதையாக உள்ளது. இப்பகுதியில் மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. தொடர்ந்து ராமேஸ்வரம் புனித ஆன்மிக தலத்தை மையமாக வைத்து அனைத்து வகையான அதிவேக ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் முன்பு இருந்த 90 கி.மீ., என்ற வேகம் 110 கி.மீ., ஆக மாற்றப்பட உள்ளது. இதற்காக தண்டவாளங்கள் பலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதே போல் ஒவ்வொரு ரயில்வே கிராசிங்குகளிலும் சதுர கற்கள்பெயர்த்து சீரமைக்கப்படுகிறது.
இதன்படி பரமக்குடி சோமநாதபுரம் ரோடு, வேந்தோணி ரோடு, திருவாடி ரோடு என பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன. ஆனால் ரயில்வே கிராசிங் பகுதிகளில் சதுர கற்களை முறையாக வைக்காமல் குண்டும், குழியுமாக விட்டுள்ளனர்.
மாதக் கணக்கில் இவற்றை சீர் செய்யாமல் உள்ளதால் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோக்கள் தடுமாற்றத்துடன் செல்கிறது. ஆகவே விபத்து நடக்கும் முன் இது போன்ற ரோடுகளை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.