/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிஸ்டு கால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
/
மிஸ்டு கால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
ADDED : மே 10, 2024 04:46 AM

திருவாடானை: மிஸ்டு கால் மூலம் காதலித்த ஜோடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஊமைஉடையான்மடை கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் 24. ஓராண்டிற்கு முன்பு நண்பரின் அலைபேசிக்கு அழைப்பதற்கு பதில் வேறு எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்துள்ளார்.
அந்த எண்ணிலிருந்துசேலம் மாவட்டம் ஓமலுார் கிராமத்தை சேர்ந்த கவுசி 21, போன் செய்து பேசினார். இருவரும் அலைபேசியில் அடிக்கடி பேசத் துவங்கினர். நீண்ட நாட்களாக முகம் பார்க்காமல் அலைபேசியில் காதலித்து வந்தனர்.
இருவரும் நேரில் சந்தித்து பேசினர். மே 6ல் திருப்பூர் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள அய்யனார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இத்தகவல் இரு குடும்பத்தாருக்கும் தெரிந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று இருவரும் திருவாடானை மகளிர் போலீசில் தஞ்சம்அடைந்தனர். போலீசார்இரு குடும்பத்தாரை அழைத்து பேசி சமரசம் செய்தனர்.