/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
/
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 19, 2024 04:43 AM
இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது
ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 19-
உப்பூர் அருகே மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9:45 மணி முதல் 11:15 மணிக்குள் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 17ல் அனுக்ஞை, விக்னேஸ்வரர், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ச்சியாக நேற்று காலை மூன்று கால யாகசாலை பூஜைகளும், மாலையில் பூர்ணஹூதி தீபாராதனையும் நடந்தது. இன்று காலை 7:15 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோ பூஜை, நாடி சந்தானம் நடைபெற்று மகா பூர்ணஹூதி தீபாராதனை நடக்கிறது.
அதைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 9:45 முதல் 11:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மறுநாள் பாய்மர படகுப் போட்டியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மீனவ பட்டங்கட்டியார்கள் செய்து வருகின்றனர்.