ADDED : பிப் 28, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி மஸ்ஜிதே நுார் தெற்கு பள்ளி வாசல் மதரசா ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. ஜமாத் சபை தலைவர் காதர் மீரா கனி தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் அப்துல் அஜீஸ் ஜமாத் செயல்பாடுகள் குறித்து பேசினார். துணைத் தலைவர் கலீல் ரஹ்மான் வரவேற்றார்.
மாவட்ட உலமாக்கள் சபையின் பொதுச் செயலாளர் ஜலாலுதீன் மன்பஈ, மாவட்ட ஐக்கிய ஜமாத் சபை பொதுச் செயலாளர் ஆலம், ஆசிரியர் ஹிதாயத்துல்லா வாழ்த்தி பேசினர்.
மாணவர்களுக்கு குர்ஆன், பாங்கு ஓதுதல் போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. பொருளாளர் ஜஹாங்கீர் அலி நன்றி கூறினார்