/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி
/
குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி
ADDED : மார் 07, 2025 01:29 AM
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், சம்பையைச் சேர்ந்தவர் பிரபு, 35. இவரது மனைவி விமலா, 28. தம்பதியின் முதல் குழந்தை இறந்துவிட்டது. இரண்டாவது பெண் குழந்தை தியாஸ்மிதா, 3. கட்டட வேலைக்கு செல்லும் பிரபு, குடும்ப தேவைகளுக்காக கடன் வாங்கி உள்ளார்.
கடன் கொடுத்தவர்கள் வட்டி கேட்டு தொந்தரவு செய்தனர். இச்சூழலில், ராமேஸ்வரத்தில் கட்டட வேலையில் போதிய வருவாய் கிடைக்காததால், பிரபு தேவகோட்டையில் தங்கி வேலை செய்கிறார்.
வீட்டில் இருந்த விமலாவிடம் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். வேதனையடைந்த விமலா, வீட்டில் மகளை துாக்கிலிட்டு கொலை செய்தார். பின், தானும் துாக்கில் தொங்கினார்.
அப்போது அங்கு வந்த உறவினர்கள், உயிருக்கு போராடிய விமலாவை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.