/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாததால் விபத்து காயமடையும் வாகன ஓட்டிகள்
/
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாததால் விபத்து காயமடையும் வாகன ஓட்டிகள்
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாததால் விபத்து காயமடையும் வாகன ஓட்டிகள்
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாததால் விபத்து காயமடையும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 25, 2025 07:14 AM
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கன்னிராஜபுரத்தில் இருந்து நரிப்பையூர், சாயல்குடி வழியாக கிழக்கு கடற்கரை சாலையின் மீது புதிய தார் ரோடு அமைக்கும் பணி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது.
இந்நிலையில் கன்னிராஜபுரத்தில் இருந்து சாயல்குடி வரை உள்ள பத்திற்கு மேற்பட்ட வேகத்தடைகளில் வெள்ளை பிரதிபலிப்பானுடன் கூடிய வர்ணம் பூசாததால் இரவு நேரங்களில் வரக்கூடிய வாகனங்கள் வேகமாக வந்து விபத்தை சந்திக்கின்றன.
இரவு நேரங்களில் டூவீலரில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் எதிரே உள்ள வேகத்தடை தெரியாததால் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தேவையான இடங்களில் வேகத்தடையில் வர்ணம் பூசவும், பிரதிபலிப்பான ஸ்டிக்கர்களை பொருத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.