/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரத்தில் மணல் குவியல்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
/
ரோட்டோரத்தில் மணல் குவியல்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
ரோட்டோரத்தில் மணல் குவியல்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
ரோட்டோரத்தில் மணல் குவியல்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 25, 2024 06:10 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகரில் போக்குவரத்து மிகுந்த இடங்களில்ரோட்டோரம் மணல் குவிந்துள்ளதால் வேகமாகசெல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் உள்ளூர்மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். எப்போதுமே போக்குவரத்து நிறைந்த பகுதிகளான மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, தேவிபட்டினம் ரோடு ஆகிய இடங்களில் ரோட்டோரத்தில் மணல் குவிந்துள்ளது.
டூவீலர்களில் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் காற்றில் துாசி பறப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ரோட்டோர மணலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.