/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில்வே பீடர் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : செப் 09, 2024 05:21 AM

ராமநாதபுரம் ; ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வேபீடர் ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.
ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணியால் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 200க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வியாபார நோக்கத்தில் ரயில்வே பீடர் ரோட்டை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைத்துள்ளனர்.
இதனால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் போதும், வெளியே வரும் போதும ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பாலம் வரை வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.