/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதுமடத்தில் மண்மேவிய தெருக்களால் மக்கள் அவதி எரியாத தெருவிளக்குகள்
/
புதுமடத்தில் மண்மேவிய தெருக்களால் மக்கள் அவதி எரியாத தெருவிளக்குகள்
புதுமடத்தில் மண்மேவிய தெருக்களால் மக்கள் அவதி எரியாத தெருவிளக்குகள்
புதுமடத்தில் மண்மேவிய தெருக்களால் மக்கள் அவதி எரியாத தெருவிளக்குகள்
ADDED : ஜூலை 16, 2024 05:57 AM
ரெகுநாதபுரம், : மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் தெருவிளக்குகள் முறையாக எரியாததால் பெரும்பாலான பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது.
பள்ளிவாசலுக்கு செல்லும் பிரதான தெருக்களில் பேவர் பிளாக் மற்றும் தார் ரோடு அமைக்கப்படாததால் தற்போது வரை மணல் ரோடாக உள்ளது.
மழை பெய்தால் சகதி, வெயில் அடித்தால் புழுதி என்ற நிலையில் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதுமடத்தைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., கட்சியின் கிளை செயலாளர் சதாம் உசேன் கூறியதாவது:
இரவு நேரத்தில் சமீபத்தில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்ற சிறுவனை பாம்பு கடித்ததில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுமடம் தெருக்களில் மணல் அதிகளவு மேவி காணப்படுவதால் டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர்.
மிளகு சாய்வு தர்காவில் இருந்து தவ்ஹீத் பள்ளி வரையிலும் எதிர்புறமுள்ள சந்திலும் தெருவிளக்குகள் இல்லை. கம்பங்களில் மின்விளக்குகள் இன்றி காட்சிப் பொருளாக உள்ளன. எனவே தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஊராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.
மண்டபம் யூனியன் அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.