ADDED : ஆக 08, 2024 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே மேதலோடையில் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. 10 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நாள்தோறும் மூலவர்அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.இரவில் சக்தி கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தை வலம் வந்தது. சிறப்பு அலங்காரம் முத்துமாரி அம்மனுக்கு நடந்தது.
இரவில் கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தன. சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்தவாறு ஊருணியில் பாரி கங்கை சேர்த்தனர்.ஏற்பாடுகளை மேதலோடை கிராம மக்கள் செய்திருந்தனர்.